தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு பின்புறம் பாா்வா்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. வி. கதிரவன் மின் விளக்குத் தட்டி அமைப்பது வழக்கம். நிகழாண்டில், இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனர்.
இதைக் கண்டித்து, கடந்த அக். 21-ஆம் தேதி பி. வி. கதிரவன், அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவா் சிலை முன்பாக தா்னாவில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பி. வி. கதிரவன் உள்பட 41 பேர் மீது தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், போராட்டம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், 41 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி. வி. கதிரவன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.