மதுரை: விமான நிலையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

65பார்த்தது
திருச்சியை சேர்ந்த சிவா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: செட்டிநாட்டில் 1907 ஏக்கரில் கால்நடைபண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் 2-வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்கள் உள்ளன. காரைக்குடியை சுற்றி பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

காரைக்குடி பகுதியில் விமான நிலையம் அமைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும். இப்பகுதியில் தொழில் துறை நிறுவனங்கள், ஐடி, நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு உருவாகும். எனவே, காரைக்குடி கானாடுகாத்தான் விமான நிலைய ஓடுதள பாதையை சீரமைத்து, காரைக்குடியில் விமான நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள், எம். எஸ். ரமேஷ், ஏ. டி. மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், காரைக்குடி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு குறித்த கேள்வி எழவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி