மதுரை: பர்ஸை தொலைத்த பயணி; ஒப்படைத்த ரயில்வே போலீஸ்

75பார்த்தது
மதுரை: பர்ஸை தொலைத்த பயணி; ஒப்படைத்த ரயில்வே போலீஸ்
புத்தாண்டு தினமான நேற்று இராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் பகுதியைச் சேர்ந்த முஹமதுகான் (43) என்பவர் மதுரை ரயில்வே நிலைய நடைமேடை 1ல் பயணம் செய்ய காத்திருந்தபோது கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் முஹமது கான் வைத்திருந்த மணிப்பர்சை அமர்ந்த இடத்தில் மறந்துவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் 1ஆம் நடைமேடைப் பகுதியில் ரோந்து சென்று வரும்போது சிறப்பு சார்பு ஆய்வாளர் ஹுமாயூன் உள்ளிட்ட ரயில்வே காவல்துறையினர் மணிப்பர்ச் கிடப்பதைக் கண்டு அதனை எடுத்துவைத்து முதலாவது நடைமேடையில் இருந்த அனைவரிடம் தகவல் கூறிக்கொண்டே வந்துள்ளனர். 

அப்போது முஹமதுகான் பர்சைப் பார்த்து தனதுதான் என்றும் அமர்ந்த இடத்தில் மறந்து வைத்துவிட்டு சென்றேன் என்று கூறினார். இதையடுத்து முஹம்மதுகானின் பர்ச் குறித்து முழு விவரத்தை கேட்டு தெரிந்து உறுதிப்படுத்தினர். பின்னர் ரயில்வே காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட 54 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தையும், ஆதார் அட்டை, வோட்டர் ஐடி, ஏடிஎம் கார்டுகளையும் ஒப்படைத்துள்ளனர். பயணி தவறவிட்ட 54 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினருக்கு ரயில்வே காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி