மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா. ஜ. க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச். ராஜா நேற்று வருகை தந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
மதுரை கிண்டியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றம் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளியின் மகனால் கொலை வெரித்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் போதை பழக்க வழக்கம் அதிகரித்துள்ளது. நம் வீட்டுப் பிள்ளைகளின் புத்தகப் பைகளை தினசரி சோதனை செய்ய வேண்டும் என பெற்றோருக்கு எண்ணம் வந்துவிட்டது.
இது போன்ற நிகழ்வினால் இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்க மாட்டோம் என கூறிவிட்டால் என்ன செய்வது.
பாஜக அப்ளிகேஷன் போட்டு இருக்கா அல்லது வாசலில் போய் நின்று இருக்கிறோமா நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கூட்டணி குறித்து எந்த கருத்தும் நான் கூற மாட்டேன் மத்திய தலைமை பதினாறு மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை செயல்படுத்தும் இடத்தில் நான் உள்ளேன். இவற்றை கருத்தை சொல்ல மாட்டேன். புதிய கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்.
என்றார்.