மதுரை: ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்துஒருவர்உயிரிழப்பு

61பார்த்தது
மதுரையைச் சேர்ந்த கருப்பையா என்ற பணி ஓய்வு பெற்ற முதியவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மதுரை தெற்கு வட்ட நில அளவை பிரிவில் அலுவலகத்திற்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த நிலையில் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசு அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தரும் நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவசரகால மருத்துவ உதவி மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி