மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் மற்றும் கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துவின் பெற்றோர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து கொலை வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தலித் பூசாரியாக பணியாற்ற கூடாது என நாகமுத்து தாக்கப்பட்டு உள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அறங்காவலர்கள் பழனிச்சாமி, வெங்கடசாமி மீது நாகமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்கொலை வழக்கில் மூன்றாண்டுகளுக்கு பின் ஒ. ராஜா உட்பட 7 பேர் மீது தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் வரை நாகமுத்து வழக்கை எடுத்து செல்வோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். வழக்கு பதிவு செய்ய மூன்று ஆண்டுகள், விசாரணை 9 வருடங்கள் நடந்துள்ளது. தற்கொலை கடிதத்தில் நாகமுத்து குறிப்பிட்ட காவல் அதிகாரிகளின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவேயில்லை. நாகமுத்து வழக்கில் அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை, உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் வரை நாகமுத்து வழக்கை எடுத்து செல்வோம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லவில்லை. எஸ். சி. எஸ். டி வழக்குகளின் விசாரணையை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க அரசு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்" என கூறினார்.