மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆறுபடை வீட்டின் கோபுரம் போன்ற அமைப்புடன் மட்டுமே மாநாடு நடத்த உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை வண்டியூர் செல்லும் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் 6 படை வீட்டில் இருந்து பூஜிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து கணபதி ஓமம், வேல் பூஜை செய்யப்பட்டது.
முன்னதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
முருக பக்தர்கள் மாநாட்டில் வருகின்ற 13ஆம் தேதி கண்காட்சி நடைபெற உள்ளது. நேற்றயதினம் 6 படை வீட்டிலிருந்து முருகனின் வேல் எடுத்து வந்து மதுரையில் கட்சி அலுவலகத்தில் அதற்கான பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டை பற்றி அவதூறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர். இந்துக்களை ஒற்றுமை படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஏராளமானோர் வருகை தரவுள்ளனர்.
கிறிஸ்துவர்கள் சென்னிமலை தங்களது என கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வில்லை. மேலும். , திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இந்த மாநாடு திருப்பு முனையாக அமையும் என்றார்.