அமைச்சரை சந்தித்த மதுரை எம்எல்ஏ.

71பார்த்தது
அமைச்சரை சந்தித்த மதுரை எம்எல்ஏ.
சென்னையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K. N. நேரு அவர்களை அவரது இல்லத்தில் நேற்று மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் சந்தித்தார்.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட வார்டு எண்: 85ல் பாம்பன் ரோட்டில் 1970 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள பழைய மாநகராட்சி மண்டபத்தை இடித்துவிட்டு புதிதாக திருமண மண்டபம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உடனே நிதி வழங்கி விடுவோம் என தாயுள்ளதோடு கூறிய அமைச்சர் நான் கொடுத்த கோரிக்கை மனுவில் தம் கைப்பட பரிந்துரைத்து கையொப்பம் இட்டுள்ளார். இதுகுறித்து
உடனடியாக மாநகராட்சி ஆணையரிடமும் பேசி நிதி ஒதுக்கும்படி கூறியுள்ளார்.

வேறு என்ன வேணும் என்று அமைச்சர் கேட்க அமைச்சரிடம் தொகுதியில் சாலைகள் மற்றும் சாக்கடை பிரச்சினைகளை விரைவில் சரி செய்யும்படி பூமிநாதன் எம்எல்ஏ கூறினார்,

என்னென்ன வேணும்னு எழுதிக்கொடுங்க எல்லாத்தயும் பண்ணிடுவோம் என்று கூறிய அமைச்சரிடம் தொகுதிக்கான சில கோரிக்கைகளை எழுதி அமைச்சரிடம் எம்எல்ஏ கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி