மதுரை: உள்துறை அமைச்சரை சால்வை அணிவித்து வரவேற்ற மதுரை ஆதினம்

85பார்த்தது
மதுரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார்.

மேலும், மதுரை ஆதினத்தின் மூலமாக வெளியாகும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தை மதுரை ஆதினம் இன்று உள்துறை அமைச்சருக்கு பரிசாக வழங்கி வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு, கச்சதீவை மீட்க வேண்டும், இந்திய மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி