பிங்க் புக் வெளியிடவில்லை என மதுரை எம். பி புகார்.
By சு.இரத்தினவேல் 75பார்த்ததுமதுரையில் கட்சி அலுவலகத்தில் மதுரை எம். பி வெங்கடேசன் பேட்டியளிக்கையில், நாடாளுமன்றத்தில் நாளையோடு பட்ஜெட் மீதான விவாதம் முடிகிறது.
ஆனால் இன்று வரை ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புக் ( Pink Book ) வெளியிடப்படவில்லை.
ஆவணங்களை வெளியிடாமலேயே விவாதத்தை முடிக்க நினைக்கிறது எதேச்சதிகார பாஜக அரசு.
2017 ல் ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள் , இப்பொழுது ஆவணங்களை வெளியிடும் முறையையும் ஒழிக்கிறார்கள் என தெரிவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.