தெற்குவாசல் காவல்துறையினரை கண்டித்தும் பள்ளிவாசல் ஜமாத்தினர் பள்ளிவாசல் மினராவில் (கோபுரம்) ஏறிநின்று நேற்று (புதன்கிழமை) திடீர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று பள்ளி வாசல் நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் செல்வ முருகேஷ் பேட்டி அளித்தார். அதில்,
மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் தர்கா மற்றும் பள்ளிவாசல். மீனா நூர்தீன் தர்கா பள்ளிவாசல்களை
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வக்பு வாரியம் கையகப்படுத்த கூடாது.
முறைகேடு புகார் குறித்து, வக்பு வாரியம் முறையாக நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டு அதன் பிறகே நிர்வாகத்தை, வக்பு வாரியம் கையகப்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எந்த நடவடிக்கை யும் எடுக்க கூடாது.
வக்பு வாரியம் விதி முறைகளை மீறி செயல்பட கூடாது; அத்து மீறி காவலர்களுடன் உள்ளே நுழைய கூடாது
மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் தர்கா மற்றும் பள்ளிவாசல். நிர்வாகிகள் தரப்பில் - வக்பு வாரியத்த்தின் சார்பில் பேச்சு வார்த்த நடத்த தயாராக உள்ளோம். இதற்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் தரப்பில் குழு அமைத்து உள்ளோம். பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்றார்.