மதுரை: மல்லிகை கிலோ ரூ. 1800க்கு விற்பனை

77பார்த்தது
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேல் பூக்கள் இந்த மலர் வணிக வளாகத்தில் விற்பனை ஆகிறது.

தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால், கணிசமான விலையில் அனைத்து பூக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ. 1, 800, மெட்ராஸ் மல்லி ரூ. 600, பிச்சி ரூ. 800, முல்லை ரூ. 800, செவ்வந்தி ரூ. 100, சம்பங்கி ரூ. 160, செண்டு மல்லி ரூ. 60, கனகாம்பரம் ரூ. 800, ரோஸ் ரூ. 200, பட்டன் ரோஸ் ரூ. 250, பன்னீர் ரோஸ் ரூ. 300, கோழிக்கொண்டை ரூ. 80, அரளி ரூ. 250, தாமரை (ஒன்றுக்கு) ரூ. 18 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்களின் விலையில் ஏற்றம் இருந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. நாளை கிறிஸ்துமஸ் என்பதால் வழக்கமாக பூக்களின் விலையில் ஏற்றம் காணப்படும். மாறாகப் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி