மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

68பார்த்தது
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம். ஜி. ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே. கே. நகரில் உள்ள எம். ஜி. ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், 2026 இல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கொண்டு வர கடுமையான பாடுபட வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு கூறுகையில்

"தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது காவல்துறை செயலிழந்து விட்டது என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது, திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். எஸ். பாரதி, சாதிக் பாஷா ஆகியோரின் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

திமுகவில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஜொலிக்கிறார்கள், கலைஞரை கூட மறந்துவிட்டார்கள். அதனால் தான் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவரது பெயரை வைக்கிறார்கள்.

டி. டி. வி. தினகரன் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி உயர்த்துவது கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி