மதுரை: அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

59பார்த்தது
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் இன்று (12.03.2025) அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது: - இந்தாண்டு நிதி நிலை அறிக்கை இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு அதற்குப் பிறகு துறை தோறும் மானிய கோரிக்கைகள் மாநில சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம். 

அமைச்சர்கள் எல்லாம் மாநகராட்சிகளுக்கு இணைந்த துறையாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை வருவதற்கு உதவும் வகையில் அதை சமர்ப்பிக்க உதவும் வகையில் இந்த நேரத்தில் இத்தகைய நிகழ்வை நடத்துகிறோம். 

எனவே மாநில அளவில் நிதியை ஒதுக்கி ஒரு மாபெரும் முயற்சியாக எடுக்க வேண்டிய பணிகளை கண்டறிந்து அதை அமைச்சர் நேரு மற்றும் துறை செயலாளர் கார்த்திகேயன் அவர்களிடம் வழங்க இருக்கிறோம். இதனை இந்த ஆண்டு நிதி ஒதுக்கி இந்த பணியை செய்வதற்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி