மதுரை தென்பழஞ்சி பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த அரசு பேருந்து எல்லிஸ்நகர் மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது பிரேக் பிடிக்காமல் ஓடியது.
இதனால் பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்து இரு ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து சிமெண்ட் தடுப்பின் மீது மோதி் நின்றது. நல்வாய்ப்பாக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக சென்ற பயணிகள், மாணாக்கர்கள், பேருந்தில் இருந்த பயணிகளும் உயிர் தப்பினர்.
இது போன்ற காலாவதியான பழுதான அரசு பேருந்துகளை இயக்குவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.