மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மதுரை உத்தங்கடியில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாராகி வருகின்றன. 24 வகையான சைவ உணவுகள், 24 வகையான அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சைவத்தை எடுத்து கொண்டால் குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, சவ்சவ் கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ஃபிரை, வெண்டைக்காய் ஃபிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லெட் + சாஸ், பருப்பு வடை, சப்பாத்தி, சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி + நெய், சாம்பார், எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
அசைவத்தை பொறுத்தவரை பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், சாதம், எலும்பு தால்சா, அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஜிகர்தண்டா, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.