மதுரை: மாணவிகளை வரவேற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

63பார்த்தது
மதுரை: மாணவிகளை வரவேற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்
கோடை விடுமுறைக்குப் பின்பு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இன்று காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த மாணவிகள் தங்களது நண்பர்களைப் பார்த்து மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் கைகளில் பூக்கள் கொடுத்தும், சாக்லேட்டுகள் இனிப்புகள் குங்குமம், சந்தனம் வழங்கியும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் சிறப்பாக பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்டதையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரடியாக ஆய்வுகள் மேற்கொ

தொடர்புடைய செய்தி