மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இதுவரையில் பயன்பாட்டுக்கு வராமலும், வாடகைக்கு விடப்படாமலும் உள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும், மாநில அரசே அந்த நிதியை ஒதுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சிக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, செயல்படாமல் இருக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதிமுக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது, மும்மொழி கொள்கையில் உடன்பாடு இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு, திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என சட்டப்பேரவையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.