மதுரை: பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியர் முன்பாக மோதல்

55பார்த்தது
மதுரை: பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியர் முன்பாக மோதல்
மதுரை தபால்தந்தி நகர் சாலை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கேலி செய்து தொந்தரவு அளித்ததாக கூறி சக மாணவர்களிடம் கேட்பதற்காக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர் பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்போது மாணவரை கேலி செய்ததாக கூறப்பட்ட மாணவரை அழைத்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், உறவினர் முன்பாக தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் பெற்றோர் தரப்பு என ஒருவரை சரமாரியாக தாக்கிக்கொண்டனர். தலைமை ஆசிரியர் முன்பாகவே சண்டையிட்டதால் பள்ளியில் வந்து இதுபோன்று சண்டையில் ஈடுபடக்கூடாது என தலைமை ஆசிரியர் கூறியபோதும் தொடர்ந்து இரு தரப்பாக மோதிக்கொண்டனர். 

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி