மதுரை மாநகர் பகுதியில் கடந்த 2021-2025 வரை 1883 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,815 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6083 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டதாகவும், இவ்வழக்குகளில் 2917 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2485 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17427 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 132 கடைகளுக்கு சீல் வைத்ததோடு, 2654 நபர்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் பகுதியில் திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன 3412 செல்போன்கள் சைபர்கிரைம் காவல்துறையால் கண்டறியப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 வருடங்களில் ரவுடி கொலைகள் எதுவும் இல்லை எனவும், பழிக்கு பழி வாங்கும் முன்விரோத கொலைகள் மாநகர் பகுதியில் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 33 கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 89 பெண் காவலர்களை கொண்டு போலீஸ் அக்கா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளும் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.