மதுரை: மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

74பார்த்தது
மதுரை மாநகராட்சி 71 வது வார்டுக்கு உட்பட்ட மாடக்குளம் PKP நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் போதிய சாலை வசதிகள் இல்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓட்டு கேட்டு வந்த பின்னர் விசிக கவுன்சிலர் முனியாண்டி தங்களது பகுதிக்கு வரவில்லை என குற்றச்சாட்டு- தங்கள் பகுதிகளில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும், மாநகராட்சிக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தில் இருந்து கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறிவரும் நிலையில் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி