மதுரை: வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு தொடர்பான வழக்கு

60பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சிவமுருக ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஆதாா் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் விரல்ரேகைகள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி இடம் பெறுகின்றன. இந்த அட்டையைப் பயன்படுத்தி எந்தவித முறைகேடோ அல்லது மோசடியோ மேற்கொள்ள இயலாது.

தமிழகத்தை பொருத்தவரை உணவு, பொது விநியோகத் துறை, உள்ளாட்சித் துறை, நிதி சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கவும், மோசடி பரிவா்த்தனைகளைத் தவிா்க்கவும் பல்வேறு வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுதவிர, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பின் கீழ் வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்துத் தோ்தல்களிலும் ஒவ்வொரு குடிமகனும் வாக்குரிமை பெற வாக்காளா் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாகும். வாக்காளா் அடையாள அட்டை மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வழக்குரைஞா் தோ்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி