மதுரை: 7 லஞ்சம் கேட்ட சிபிஐ அலுவலர் மீது வழக்குப்பதிவு

63பார்த்தது
வருமான வரி மோசடி புகார் தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனிடம் வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக மதுரை சிபிஐ அலுவலர் தினேஷ்குமார் என்பவர் மீது மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவால் 30. 05. 2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் வருமானவரி முறைகேடு தொடர்பான வழக்கில் ரூபாய் 12 லட்சம் அவரது சகோதரர் பஞ்சாட்சரத்தின் வங்கி கணக்கில் இருந்து பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ராமச்சந்திரனிடம், மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திரு தினேஷ்குமார் என்ற சிபிஐ அலுவலர் ரூபாய் 7 லட்சம் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு வெளியானது. அதன் அடிப்படையில் அந்த சிபிஐ அலுவலர் திரு தினேஷ்குமார் மீது மதுரை சிபிஐயில் கடந்து 30. 05. 2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை 13. 06. 2025 அன்று ஆஜராவதற்கு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மதுரை சிபிஐ அலுவலகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி