ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் மதுரை நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது பைக்கில் அதிவேக சாகச பயணம் மேற்கொண்டதாக 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக மொத்தம் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.