மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அமித்ஷா

51பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காரில் இன்று (ஜூன். 8) நண்பகல் 12 மணிக்கு வந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக தலைவர் நைனார் நாகேந்தின்
ஆகியோர் வந்தனர்.

மதுரை சிந்தாமணி சுற்று சாலை, விரகனூர் சந்திப்பு தெப்பகுளம், கீழவாசல், விளக்கு தூண், அம்மன் சன்னதி வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த போது மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்தில் ஆதீனம் வாசலில் நின்றிருந்தார். அவ்வழியாக வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அவருடைய வரவேற்பு ஏற்றுக் கொண்ட பிறகு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

அமித்ஷா வருகையை ஒட்டி அவர் செல்லும் பாதையில் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி