மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட , மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் உரையாற்றியபோது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த பாஜக நிர்வாகிகள் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது பாஜக கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பி பாஜக நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரின் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள் அண்ணாமலை பெயரை சொன்னபோது உற்சாகமடைந்த நிகழ்வு பாஜகவில் அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் இடையே ஆதரவாளர்கள் ஆதரவு இடைவெளி உள்ளதோ என கேள்வி எழுந்துள்ளது.