மதுரையில் இன்று (மார்ச் 20) மதியம் நத்தம் பறக்கும் பாலத்தில் டிஆர்ஓ காலனி பகுதியில் மேல் மேம்பாலத்தில் சென்ற லாரியின் டயர் பஞ்சரானதால் அதை சரிபார்க்க நிறுத்தப்பட்டிருந்தது. இந்நேரத்தில் ஊமச்சிகுளம் பகுதியிலிருந்து வந்த கார் இந்த மினி லாரியின் பின்புறத்தில் மோதியதில் காரின் டிரைவர் மதியழகன் (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயங்களுடன் அப்போலோ மருத்துவ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.