மதுரை மாநகர் கே. புதூர் லூர்து நகர் 2ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான கார்த்தி மற்றும் அவரது தாயார் லதா ஆகிய இருவரும் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி கார்த்தி மாற்றம் என்ற பெயரில் வாரத்தில் இரண்டு நாட்கள் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். மேலும் ஆட்டோ ஒன்றை வாங்கி அதனை தன்னால் முயன்றவரை ஓட்டிவருகிறார்.
தனது வருமானத்திலும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த தீபக் ராணி என்ற மாற்றுத்திறனாளி பெண் சிரமம் குறித்து தனது instagram பக்கத்தில் வீடியோ வெளியிட்டு யாரேனும் உதவுமாறு கேட்டிருந்தார்.
அந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி பெண்ணான தீபக்ராணி வாகனம் இல்லாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆட்டோவில் சென்று வருகிறார். அவருக்கு யாரேனும் மூன்று சக்கர பைக் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவருடைய வாழ்வாதாரத்துக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த நடிகர் லாரன்சின் மாற்றம் இயக்கத்தைச் சார்ந்த சென்னையை சேர்ந்த இளம் பொறியாளர் சிவா 50 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று சக்கர பைக்கை இன்று தீபக்ராணியிடம் வழங்கினர்.
பின்னர் அன்னதான திட்டத்திற்காக 3 ஆயிரம் ரூபாயையும் ஒப்படைத்தனர்.