மதுரை: 7 வயது சிறுமி கின்னஸ் உலக சாதனை

66பார்த்தது
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் நாராயணன் மற்றும் ஸ்ருதி தம்பதியினரின் 7வயது மகளான சம்யுக்தா சிறுவயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி பெற்று கடந்த 2022 ஆம் ஆண்டு 5 வயதில் ஜம்பிங்ஜாக்ஸ் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்தார்.

தற்போது 7வயதான சம்யுக்தா கொரியா நாட்டிலுள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் குறைந்த வயதில் செய்து காட்டி உலக சாதனைக்கு தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

டேக்வாண்டோவில் உலகின் இளம் வயது கின்னஸ் சாதனையாளர் என்ற சாதனையைப் படைத்ததற்காக சம்யுக்தாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.

மதுரை டேக்வாண்டோ அகாடமியின் தலைமைப் பயிற்சியாளரும் மென்பொறியாளரான விஜய் நாராயணன் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி ஆகிய இருவரும் டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில் அவர்களது 7வயது மகளான சம்யுக்தா 2ஆவதாக கின்னஸ் உலக சாதனைபடைத்து உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக உருவாகி சாதனை படைததுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி