கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த பார்சலில் 240 கிலோ எடையுடன் அசோக் என்ற பெயரில் அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் வந்துள்ளது. இதனை இறக்கி மதுரை ரயில்வே நிலைய பார்சல் அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது பார்சல் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது அதில் 240 கிலோ அளவில் தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குட்காவை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. 240 கிலோ பார்சலில் குட்கா கடத்தப்பட்டது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.