சிவகங்கை மாவட்டம் அம்பலத்தடி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் 48. இவர் லோடு மேன் வேலை பார்த்து வந்தார். இவர் விரகனூர் நெடுங்குளம் சாலையில் பைக் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து அவர் தவறி கீழே விழுந்தார்.
இதில் குமரேசனுக்கு தலையில் பலமாக அடிபட்டு மயங்கினார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லோடுமேன் குமரேசன் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி முருகேஸ்வரி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லோடுமேன் குமரேசன் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.