அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, அப்பாவி பொதுமக்கள் வரை பலரின் உயிர் பரிதாபமாக பறிபோய் வருவது தொடர் சம்பவங்களாக உள்ளது. நேற்று கூட திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், அதுவும் கோவில்பட்டியில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் நெஞ்சம் பதறுகிறது.
இந்த லட்சணத்தில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையால், 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று திமுக அரசு மார்தட்டுகிறது.
மக்களே சிந்தித்துப் பாருங்கள் அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கு முதல், அரக்கோணம் பாலியல் வழக்கு வரை திமுக அரசு எந்த லட்சணத்தில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை கையாண்டு வருகிறது என்பதை நாடு அறியும். தெய்வசெயல் போன்ற பாலியல் கயவர்களையும் பல சார்களையும் காத்து நிற்பது இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு தான் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை இன்று தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.