மதுரை: மத்திய பாஜக அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை சென்று ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சிபிஐஎம், சிபிஐ, சிபிஐ எம்எல் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பெரியார் பேருந்து நிலையம் பிரதான சாலையில் இடதுசாரி இடதுசாரிகள் கட்சியினர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.