நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

78பார்த்தது
நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு
நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

மதுரை: 'நீட்' தோ்வில் சிறப்பிடம் பெற்ற மதுரை சிஇஓஏ பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வு ( நீட்) அண்மையில் நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்ற மதுரை சிஇஓஏ பள்ளி மாணவி ஸ்ரீநிரஞ்சனா 690 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். இதேபோல, மாணவி அக்ஷயாஸ்ரீ 667, மாணவி இன்னிஸ்னோரியா 665 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியின் நிறுவனத் தலைவா் ராஜா கிளைமாச்சு உள்ளிட்ட ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தொடர்புடைய செய்தி