கார்கில் தினம் ஓவிய போட்டி பரிசளிப்பு விழா

71பார்த்தது
கார்கில் தினம் ஓவிய போட்டி பரிசளிப்பு விழா
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம்,
தேசிய கப்பற்படை , தரைப்படை இயக்கங்கள் சார்பாக கார்கில் போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு , தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் தலைமை தாங்கி, கார்கில் போர் மற்றும் நாட்டுப்பற்றுக் குறித்தும் சிறப்புரை யாற்றி வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதில், மாணவர்கள் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். மதுரை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு கார்கில்
நினைவு தின ஒவியப்
போட்டி நடந்தது. போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மரக்கன்று நடு விழாவில்,
நாட்டு நலப்பணித்திட்ட
திட்ட அலுவலர் முனைவர் ஞா. சந்திரன், தேசிய கப்பற்படை இயக்கப்
பொறுப்பாளர் நிர்மலின் பவுல்ராஜ், தரைப்படை இயக்கப் பொறுப்பாளர் நிர்மல் ஆகியோர் கலந்து
கொண்டு மாணவர்களுடன் மரக்கன்று செய்தனர்.

தொடர்புடைய செய்தி