மதுரை திருப்பாலை சக்தி நகரை சேர்ந்தவர் சகுந்தலா 80 இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை மாலை நடந்து சென்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென சகுந்தலா அணிந்திருந்த 6 பவுன் நகை பறித்துக் கொண்டு தப்பினர். திருப்பாலை போலீசார் அந்தப் பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.