மதுரையில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை அருணாச்சலபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(25) என்ற போட்டோகிராபர் 2021 ல் மொட்டை மாடியில் வைத்து ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். மதுரை டவுன் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.
இதனை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக் குமாரவேல் அளித்த உத்தரவில்
பால கிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.