நியாய விலைக்கடை திறப்பு விழா -சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

269பார்த்தது
நியாய விலைக்கடை திறப்பு விழா -சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜனதா பீபீகுளம்-1 நியாய விலைக்கடையின் சிங்கராயர் காலனி வார்டு 26-இல் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை நேற்று மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி தலைமையேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் மதுரை பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் இராஜேந்திரன், மதுரை மாநகராட்சி மண்டலம்-2 (வடக்கு) தலைவர் சரவண புவனேஸ்வரி , ஜனதா கூட்டுறவு பண்டகசாலையின் கூட்டுறவு சார்பதிவாளர்/ செயலாட்சியர் ம. தீனதயாளன், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சி. காமேஷ் கண்ணா மற்றும் ஜனதா கூட்டுறவு பண்டகசாலையின் பணியாளர்கள் உடன் இருந்தனர்‌.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி