ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்படி, மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் செப். 17-ஆம் தேதி முதல் அக். 2-ஆம் தேதி வரை இருவார கால சுகாதார விழிப்புணா்வு இயக்கம் நடைபெறுகிறது.
ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்வது, தூய்மைப் பராமரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற அடிப்படையில் இந்த சுகாதார விழிப்புணா்வு இயக்கம் நடைபெறுகிறது.
இதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் உள்ள உயா்நிலை பாலங்களின் பக்கவாட்டுச் சுவா்களில் சுகாதார விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன.
நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம், சுற்றுச்சூழலை தூய்மையாகப் பராமரிப்போம் போன்ற விழிப்புணா்வு வாசங்களுடன், இயற்கை சூழல் பாதுகாப்பு ஓவியங்கள் இங்கு வரையப்படுகின்றன.