மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாநகர காவல் துறை சார்பாக நகரின் பல்வேறு இடங்களில் காவலர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
மதுரை மாநகர்
கோ புதூர் மூன்று மாவடி சந்திப்பில் இருந்து ஆரம்பித்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரையிலும் மதிச்சியம் RR மண்டபத்தில் இருந்து செல்லூர் கபடி சிலை வரையிலும் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் சந்திப்பில் இருந்து ஜெயந்திபுரம் மெயின் ரோடு வழியாக பாலிடெக்னிக் கல்லூரி வரையிலும் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்திலிருந்து ஆரம்பித்து சன்னதி தெரு வழியாக அறநிலையத்துறை அலுவலகம் வரையிலும்
திடீர் நகர் மேலவாசலில் ஆரம்பித்து ஆரியபவன் ஜங்ஷன் வரையிலும் ஊர்வலங்கள் நடைபெற்றது.
காவல்துறை துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் அந்தந்த சரக உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.