டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

58பார்த்தது
டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இதன்மூலம் அனைத்து போட்டித் தோ்வுகளுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொகுதி 1(குரூப் 1) 90 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தொகுதி 1 முதல்நிலை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இதில் அதிகளவிலான பயிற்சித் தோ்வுகள், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1 தோ்வுக்கான விண்ணப்பப்படிவம், ஆதாா் அட்டை, இரண்டு கடவுச்சீட்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் அறிவிப்பு வெளியீட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி