சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த தாய் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு.
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 18ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமியின் தாய் சிறுமியை தூக்கத்திலிருந்து எழுப்பி கை கால் கன்னத்தில் அடித்து காயப்படுத்தி அதே பகுதியில் குடியிருக்கும் 24 வயது இளைஞனுக்கு கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், சமூகநலத்துறை சார்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் 18 வயது பூர்த்தியடையாத நிலையில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து வைத்த குழந்தையின் தாய் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.