பாதுகாப்புக் கிடங்குக்கு: வந்த மின்னணு இயந்திரங்கள்

53பார்த்தது
பாதுகாப்புக் கிடங்குக்கு: வந்த மின்னணு இயந்திரங்கள்
பாதுகாப்புக் கிடங்குக்கு: வந்த
மின்னணு இயந்திரங்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மேலூா், மதுரை- கிழக்கு, மதுரை- மேற்கு, மதுரை- தெற்கு, மதுரை- வடக்கு, மதுரை- மத்திய ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்டவை. உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி மக்களவைத் தொகுதிக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகா் மக்களவைத் தொகுதிக்கும் உள்பட்டவை.

இந்த 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக
2, 751 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 3, 303 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3, 574 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, மதுரை டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பாதுகாப்புக் கிடங்கில் வரிசை எண் அடிப்படையில் அடுக்கி வைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் மேற்பாா்வையில், அலுவலா்கள் இந்தப் பணிகளை கண்காணித்து முறைப்படுத்தினா்.

தொடர்புடைய செய்தி