மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்விற்கு மதுரை காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்த்தப்பட்டது. மதுரை மடத்தில் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் சிறப்பு தீபாராதனை செய்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஸ்ரீமதி தொடங்கிவைத்தார்.
நிகழ்வில் மடத்தின் பொருளாளர் வெங்கட்ரமணி ராமேஸ்வரம் சங்கர மடத்தின் மேனேஜர் ஆடிட்டர் சுந்தர். மதுரை சத்குரு சங்கீத சமாஜம் செயலாளர் டாக்டர் ராஜாராம் பொறியாளர் ஸ்ரீகுமார், நிர்வாக குழு உறுப்பினர் சத்சங்கம் ஸ்ரீராமன், ஸ்தபதி செல்வராஜ் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் இல. அமுதன். ஸ்ரீதர் தொழிலதிபர் சங்கர் நாராயணன் அம்மா கேட்டரிங் கிருஷ்ணஅய்யர் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாட்டினை மதுரை காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் வெங்கட்ரமணி மற்றும் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் செய்திருந்தனர்.