தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
குறிப்பாக மதுரை மல்லிகைப் பூ நேற்று முன்தினம் 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல நேற்று முன்தினம் முல்லை 600 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 800 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், சம்மங்கி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 150, பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில்,
இன்று முல்லை 1000ரூபாய்க்கும், பிச்சி 800ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200, பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை மூகூர்த்தத்தையொட்டி இன்னும் இருதினங்களுக்கு பூக்கள் விலை உயர்ந்தே இருக்கும் என பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.