டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் வீடுகளில் மின்சாதனபொருட்கள்சேதம்

77பார்த்தது
மதுரை மாநகராட்சி பகுதியான நியூ எல்லிஸ் நகர் பகுதியில் அரசு வீட்டு வசதி வாரிய வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரில் திடீரென மின்னழுத்தம் அதிகமாகி ட்ரான்ஸ்பார்மர் வெடிக்க தொடங்கியது இதனால் வீடுகளில் இருந்த மீட்டர் பாக்ஸில் அதிகளவிற்கு மின்னழுத்தம் ஏற்பட்ட நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி , டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக இரவில் பல மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் அப்போது மக்கள் தவித்து வந்தனர்.

மேலும் இது போன்ற மின்சார துறையின் தவறால் தங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வீணான நிலையில் அப்பகுதி மக்கள் மன வேதனைக்கு ஆளாகினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you