அதிமுக ஆட்சியில் சைக்கிள், கணினி;திமுக ஆட்சியில் பீர், கஞ்சா

81பார்த்தது
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக 53 வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 53 அடி உயர கழகக் கூடிய ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சார்பில் கொடி மரத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் ஏற்கனவே உள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,

53 அடி உயர கழக கொடியை ஏற்ற காவல்துறையின் அனுமதி கேட்டபோது அனுமதி மறுத்தது. அத்துமீறி கொடியேற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் கூறினாலும் அதிமுக இதற்கெல்லாம் அஞ்சாது. மதுரையில் நேற்றைய தினம் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு செல்கிறான். நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் வெட்டப்படுகிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என நீதிபதிகள் இன்றைக்கு ஒவ்வொரு முறையும் திமுக அரசிற்கு கொட்டு வைக்கிறார்கள்.

கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை தேவை என கூறி இருக்கிறது. SP அலுவலகம் அருகே உள்ள போது கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சியில் பீர், கஞ்சா ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்கிறது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி