பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதேநேரத்தில், அவர் கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர் மீது மேலும் சில வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள யூட்யூபில் சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் நேற்று (செப்.,25)செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவதுதமிழக முதல்வராக இருந்த கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல் வளையையும் நெருக்குவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாபக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் என்றார்.