மதுரை: மத்திய பாஜக அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த சம்பத் (சிபிஐஎம் மத்திய குழு உறுப்பினர்).
குறிப்பாக, மதுரை மெட்ரோ ரயில், புதிய தொழிற்சாலைகள், விமான நிலையம் விரிவாக்கத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாடு புயல், மழை வெள்ளம் நிவாரண நிதி ஒதுக்க மறுக்கப்பட்டுள்ளது,
உணவு மானியம், உரம் மானியம், கல்வி சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்றார்.