மதுரை சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற முதுகலை பட்டப்படிப்பு விருது வழங்கும் விழா மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி. குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் விழாவில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி. குருமூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் செயலாட்சியர் திரு. சு. மனோகரன் அவர்கள் எம். பி. ஏ. முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 58 ஆம் தொகுதிக்கான எச். டி. சி. எம் டிப்ளமோ படிப்பினை முடித்தற்கான சான்றிதழ்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மதுரை சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநர் கே. சத்ய குமார் சாம் மைக்கேல் அவர்கள் நன்றி தெரிவித்தார்.